உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒரு பைசா செலவின்றி அரசு வேலை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

ஒரு பைசா செலவின்றி அரசு வேலை அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

செம்பட்டி : ''தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பைசா செலவின்றி அரசு வேலை தேடி வரும்'' என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். ஆத்துாரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 360 இடங்களில் முகாம் நடக்க உள்ளது. 4 மாதங்கள் வரை நடக்க உள்ள முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுத்து தீர்வு காணலாம். மாவட்ட அளவில் இதுவரை 4 லட்சம் மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்க ஆவண செய்யப்படும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படுவதால் தமிழகத்தில் குடியிருக்க வீடுகளற்ற நிலை இல்லை என்ற சூழலை அரசு உருவாக்கி உள்ளது. படித்த இளைஞர்கள் அரசு துறை மூலம் அறிவிக்கப்படும் அனைத்து வேலைவாய்ப்புகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி உள்ளவர்களுக்கு ஒரு பைசா செலவின்றி அரசு வேலை தேடி வரும் என்றார். தாசில்தார் முத்துமுருகன் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனுஷ்கோடி, பி.டி.ஓ.,க்கள் தட்சிணாமூர்த்தி, முருகன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி