என்.பி.ஆர்., ல் புத்தாக்க பயிற்சி
நத்தம்: -நத்தம் என்.பி.ஆர்., கலை, அறிவியல் கல்லுாரியில் நாட்டுநலப்பணித்திட்டத்தின் சார்பாக புத்தாக்க பயிற்சி நடந்தது. என்.பி.ஆர்., கலை,அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் ஆ.சிவக்குமார், செல்வி கார்த்திகா முன்னிலை வகித்தனர். மாணவி ராகவர்த்தினி வரவேற்றார். ராஜபாளையம் ராஜ் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விஷ்ணுசங்கர் பேசினார். மாணவர் காமேஷ் நன்றி கூறினார்.