பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் ஆய்வு
திண்டுக்கல் : பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாத யாத்திரை வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட அன்னதான உணவுகள் தரமாக உள்ளதா என உணவுத்துறை அதிகாரிகள் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டனர்.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழாவை யொட்டி பாதயாத்திரையாக வருகின்றனர். இவர்களுக்கு வழி நெடுகிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. உணவுகள் தரமாக சமைக்கப்படுகிறதா என்பதை திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கலைவாணி தலைமையில் அலுவலர்கள் செல்வம் உள்ளிட்டோர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டனர். பழநி ரோடு,ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ரோட்டோர அன்னதான கூடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர்.