நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் கழிவுநீரை விட அறிவுறுத்தல்
திண்டுக்கல்: நிர்ணயிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடத்தில் கழிவுநீரை வெளியேற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டும் என செப்டிங் டேங்க் வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் செப்டிங் டேங்க வாகன உரிமையாளர்களுடனான கூட்டம் கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. சுகாதார அலுவலர்கள் அறிவுச்செல்வம்,ரஞ்சித் கலந்து கொண்டனர்.மாநகராட்சி பகுதிகளில் வெளியேற்றப்படும் கழிவுநீரை அதற்கென நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாறைப்பட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்தான் சேர்க்க வேண்டும். பிற இடங்களில் வெளியேற்றக் கூடாது. அவ்வாறு ஏதேனும் தகவல் தெரிந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். பணியாளர்கள்பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவரை உறுதிப்படுத்தவேண்டும்.பணியாளர்களுக்கும் இன்சூரன்ஸ் செய்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்டவை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.