உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி

மாவட்டங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி

திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்டங்களுக்கிடையேயான எஸ்.எஸ்.ராஜன் கோப்பை சீனியர் பிரிவு கிரிக்கெட் போட்டிகள் டிச. 27 ம் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் தொடங்கிய முதல் சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நாமக்கல் அணி 19.4 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தது. அருண்குமார் 46 ரன், பாலகுமார் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த சிவகங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. சுதர்சன் 53, க்ரித்திக் ரோஷன் 30 ரன்களும், சுதாகர் 4 விக்கெட்டும் எடுத்தார்.மற்றொரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கடலுார் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. சிலம்பரசன் 57 ரன் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த தர்மபுரி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 150 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. புருசேத்தமன் 46 ரன், சசிதரன் 4 விக்கெட் எடுத்தார்.நேற்றும் பி.எஸ்.என்.ஏ., கல்லுாரியில் நடந்த முதல் சுற்றுக்கான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருபத்துார் அணி 16.2 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்தது. விக்னேஷ் 3 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த திண்டுக்கல் அணி 10.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழந்து 61 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரீமகேஸ்வரன் 25 (நாட்அவுட்) ரன்.ரிச்மேன் மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கடலுார் அணி 17.2 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்தது. பாலாஜி 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த சிவகங்கை அணி 16.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சக்திவேல் 4 விக்கெட் எடுத்தார்.அதே மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்காசி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. விஜயகுமார் 4, முனிரத்தினம் 3 என விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து சேசிங் செய்த தர்மபுரி அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.பி.எஸ்.என்.ஏ., கல்லுாரி மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிருஷ்ணகிரி அணி 19.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்தது. சஞ்சய்அரவிந்த 46 ரன், ரோகித் 4 விக்கெட் எடுத்தார். தொடர்ந்து சேசிங் செய்த மதுரை அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை