உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானல் துாண்பாறை செல்லும் வழியில் இரும்பு பாலம்

கொடைக்கானல் துாண்பாறை செல்லும் வழியில் இரும்பு பாலம்

கொடைக்கானல்: கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக துாண் பாறையில் வனத்துறையினர் புதிய இரும்பு பாலத்தை அமைத்துள்ளனர்.துாண்பாறையில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக சில ஆண்டுக்கு முன் யானை சிற்பம் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது துாண் பாறை அருகே செல்லும் நீரோடையின் குறுக்கே சுற்றுலா பயணிகள் எளிதில் கடந்து செல்ல இரும்பு பாலம் ரூ. 7 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. துாண் பாறையை ரசிக்கவும், அதனருகில் உள்ள பூங்காவிற்கு செல்வதற்கும் இப்பாலம் உதவியாக இருக்கும். மேலும் எதிரே உள்ள சுவரில் கொடைக்கானல் வன சரணாலயத்தில் உள்ள விலங்குகளின் படங்கள் வரையப்பட உள்ளன. ஒவியப் பணி 3 மாதங்களில் நிறைவடையும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இப்பகுதியில் ஏற்கனவே செல்பி பாய்ன்ட் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை