உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பத்திரப்பதிவை முறைப்படுத்தப்படுத்த வேண்டியது அவசியம்; விளைநிலங்கள் பிளாட்களாக மாறுவதை தடுக்க

பத்திரப்பதிவை முறைப்படுத்தப்படுத்த வேண்டியது அவசியம்; விளைநிலங்கள் பிளாட்களாக மாறுவதை தடுக்க

கொடைரோடு: மாவட்டத்தில் பத்திரப்பதிவு முறைப்படுத்தப்படாமல் இருப்பதால் விளைநிலங்கள் பிளாட்டுகளாகவும், நீர்நிலை புறம்போக்குகள் மறைக்கப்பட்டு விற்கப்படுவது தொடர்கதையாக உள்ளது.சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஐ கோர்ட் விளைநிலங்களை பாதுகாக்க பத்திரப்பதிவின் போது வேளாண் துறையிடம், தடையில்லாச் சான்று வாங்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த உத்தரவு தற்போது இருந்தாலும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருவது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் பல இடங்களில் நீர்நிலை புறம்போக்குகள் மறைக்கப்பட்டு பத்திரங்கள் பதியப்படுகின்றன.வீட்டு மனைகளாக பிரிக்கப்படும் காலியிடங்கள் டி.டி.சி.பி., ஒப்புதல் பெற வேண்டும் என்பதால் பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் 21 செண்டுகளாக பதியப்பட்டு வருகின்றன. இவற்றை முறைப்படுத்துவதற்கு கண்காணிப்பு அவசியமாக உள்ளது. சில பத்திரப்பதிவு அலுவலகங்களில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் விதமாக பதிவுகள் நடந்துள்ளன.இதுபோன்ற முறைகேடுகளை களைவதற்கு சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 15 மண்டலங்களில் குறிப்பிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தார். அதில் மதுரை மண்டலமும் ஒன்று. அதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் பதிவு துறையினர் ஆய்வு நடத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி