உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அப்பளத்தில் வர்ணம் பூச்சு வியாபாரிக்கு சிறை, அபராதம்

அப்பளத்தில் வர்ணம் பூச்சு வியாபாரிக்கு சிறை, அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அப்பளத்தில் வர்ணம் பூசி விற்பனை செய்ய வியாபாரிக்கு சிறை, அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.திண்டுக்கல் மேற்கு ரத வீதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் 65. அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். 2022ல் இவரது கடையில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கூடுதல் வர்ணம் பூசி கலர் அப்பளம் விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து ஐயப்பன் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வழக்கு திண்டுக்கல் ஜே.எம்.2 நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளி ஐயப்பனுக்கு ரூ.10 அபராதம், ஒரு நாள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பிரியா தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ