உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்..

ஒட்டன்சத்திரம்: தேர்தல் வாக்குறுதி படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் வட்டார ஜாக்டோ ஜியோ சார்பில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ நிர்வாகி மகாராஜா தலைமை வகித்தார். நிர்வாகி மணிமாறன் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முத்துக்குமார், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி வேல்முருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி லாசர், கள்ளர் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகி அமுதவள்ளி, தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலைப் பணியாளர் சங்க நிர்வாகி செல்வம் பேசினர். இதுபோல் திண்டுக்கல்லில் கலெக்டர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் முபாரக் அலி, ஜான்பாஸ்டின், சுகந்தி தலைமை வகித்தனர். பழநியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ