கிலோ ரூ.3500க்கு விற்ற மல்லிகை
திண்டுக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் மல்லிகை கிலோ ரூ.3500க்கு விற்றது.திண்டுக்கல் நகரின்மையப்பகுதியில் அண்ணா வணிக வளாக பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நிலக்கோட்டை, செம்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, வெள்ளோடு வடமதுரை, அய்யலுார், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பூக்கள் விளைவிக்கப்பட்டு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இங்குள்ள வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர். இதனிடையே பொங்கலை முன்னிட்டு பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. அதன்படி கிலோ மல்லிகை ரூ.3 ஆயிரம் முதல் ரூ 3,500 வரை விற்பனையானது. முல்லைப் பூ ரூ 1600 , சம்பங்கி ரூ 300, ரோஜாப்பூ ரூ.220, ஜாதிபூ ரூ1200, கனகாம்பரம் ரூ.1500 , கோழிகொண்டை ரூ.80, செண்டுமல்லி ரூ.60, காக்கரட்டான் ரூ1,300, செவ்வந்தி ரூ.150 முதல் 200, மரிக்கொழுந்து ரூ.200, மருகு ரூ.120, அரளிப்பூ ரூ.450, வாடாமல்லி ரூ.70, விருச்சி ரூ.180, பட்டன் ரோஸ் ரூ.350, தாமரைப்பூ ரூ.40க்கு விற்பனையானது.