மேலும் செய்திகள்
மண் அள்ளிய 5 லாரிகள் பறிமுதல்
18-Apr-2025
வத்தலக்குண்டு: வாடகை உயர்வை வலியுறுத்தி மண்அள்ளும் இயந்திரம் ஓட்டுநர், உரிமையாளர்கள் மூன்று நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வத்தலக்குண்டு சுற்றுப் பகுதிகளில் 50க்கு மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் விவசாயம், கட்டட பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்று ஆண்டுகளாக வாடகையை உயர்த்தாமல் ஆண்டுதோறும் உயரும் சாலை வரி, இன்சூரன்ஸ், டீசல் உயர்வு காரணமாக மண்அள்ளும் இயந்திரம் தொழிலில் நஷ்டம் ஏற்படுவதால், இதை உயர்த்த வலியுறுத்தி நேற்று (ஏப். 21-) முதல் நாளை (ஏப். 23) மூன்று நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மண்அள்ளும் இயந்திரம் ஓட்டுநர், உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18-Apr-2025