கோயில் விழாவில் கழுமரம்
வடமதுரை: மோளப்பாடியூரில் விநாயகர், மந்தை கருப்பணசுவாமி, மாரியம்மன், எட்டுக்கை வீரமகாகாளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் உற்ஸவ திருவிழா ஜூன் 8 துவங்கி இன்று வரை நடக்கிறது. பல்வேறு பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியாக கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதற்காக சிறப்பு பூஜைகள் செய்த 60 அடி உயர இரு கழு மரங்கள் நடப்பட்டு கோயில் முன்பாக படுகளம் அமைக்கப்பட்டது. பாரம்பரிய உரிமை பெற்ற பாடியூர் இளைஞர்கள் மரத்தின் மீது ஏறி உச்சியில் இருந்த காணிக்கை, விபூதி பிரசாதத்தை எடுத்தப்படி கிழே இறங்கி பக்தர்களுக்கு வழங்கினர்.