உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயில்களில் கார்த்திகை வழிபாடு

கோயில்களில் கார்த்திகை வழிபாடு

திண்டுக்கல் : திண்டுக்கல்முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு நடந்தது.முருகன் கோயில்களில் கார்த்திகை சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி காலையில் பால், இளநீர், சந்தனம் உட்பட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உட்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.சின்னாளபட்டி: சதுர்முக முருகன் கோயிலில் மூலவர், வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர், சதுர்முக முருகனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சிவசுப்பிரமணியருக்கு வெள்ளி கவசம், ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி, காரமடை ராமலிங்க சுவாமி கோயிலில், விசேஷ அபிஷேகம், தீபராதனைகள் நடந்தது.பழநி : பழநி முருகன் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ,ஆறு கால பூஜையில் நடைபெற்றது. உள்ளூர்,வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை , ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார், வின்ச்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர். திருக்கல்யாணம் மண்டபத்தில் குத்து விளக்கு பூஜை நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை