மேலும் செய்திகள்
கல்வேலிபட்டி கோயில் திருவிழா
03-May-2025
நத்தம்: நத்தம் அருகே லிங்கவாடி- மலையூரில் விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.யாகசாலை பூஜைகளை தொடர்ந்து பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு புனித தீர்த்தம், அன்னதானம் வழங்கபட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
03-May-2025