உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சப்தகன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்

சப்தகன்னிமார் கோயில் கும்பாபிஷேகம்

வத்தலக்குண்டு: காந்திநகர் பைபாஸ் ரோட்டில் சப்தகன்னிமார் கோயில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அங்குள்ள விநாயகர், கருப்பண்ணசுவாமி, முனியாண்டி, நாகம்மாள், வேட்டைக்காரன் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக முதல் கால யாகசாலை பூஜை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோமாதா பூஜை, மண்டப பூஜை உட்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மங்கள இசையுடன் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் வானவேடிக்கை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்துவர கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. சப்தகன்னிமார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர் பாண்டி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை