ஆயக்குடியில் நில அளவிடு
ஆயக்குடி : பழநி ஆயக்குடி 16 வது வார்டு பகுதியில் 50க்கு மேற்பட்ட வீடுகள் வக்பு வாரிய இடத்தில் உள்ளதால் குடிநீர் இணைப்புகள் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதை தொடர்ந்து இட அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று போலீசார் பாதுகாப்பு வருவாய் துறை சார்பில் வக்பு வாரிய இடங்கள் அளவீடு நடைபெற்றது.