தலைவர்கள் பிறந்தநாள் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் தெற்கு ரதவீதி பஜனை மடம் அருகில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் எருக்கூர் நீலக்கண்ட பிரம்மச்சாரி 136வது பிறந்தநாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி எருக்கூர் கிராமத்தில் நீலக்கண்ட பிரம்மச்சாரிக்கு நினைவு ஆலயம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிழக்கு மாவட்ட சிவாஜி மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநகர் மன்ற துணைத்தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி வரவேற்றார். கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி சுசிலாராணி,நிர்வாகிகள் பத்மனாபன்,சங்கரன், அர்ச்சுனன், ஆறுமுகம், திருமுருகன், சுந்தரமகாலிங்கம், பழனியப்பன், நாகராஜ், அழகேந்திரன், திருமலைச்சாமி பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் நன்றி கூறினார். தேசிய பேரவை நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.