உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகைசுவை நாயகனா கதாநாயகனா மக்களே கூறட்டும்; நடிகர் சூரி

நகைசுவை நாயகனா கதாநாயகனா மக்களே கூறட்டும்; நடிகர் சூரி

திண்டுக்கல்:''நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா, கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்பதை மக்களே கூறட்டும்,'' என திண்டுக்கல்லில் நடிகர் சூரி தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி: 'மாமன்' படம் பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. திரையரங்குகள் அனைத்திலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். கொஞ்சம் கூட படத்திற்கு மாறுபட்ட கருத்துகள் இல்லை. வருடம் வருடம் குடும்பம் சார்ந்த படங்கள் எடுக்க ஆசைப்படுகிறேன். அனைத்து குடும்பத்திலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.கதாநாயகனாக தொடர்ந்து வெற்றி படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. நான் நகைச்சுவை நாயகனாக இருக்க வேண்டுமா, கதாநாயகனாக நடிக்க வேண்டுமா என்பதை மக்களே கூறட்டும். மக்கள் வரவேற்பு இல்லாமல் எந்த ஒரு விஷயமும் நடக்காது. கதாநாயகனாக தற்போது நடிக்கும் வாய்ப்புக்கு இடையூறு இல்லாமல் பெரிய நடிகருடன் நகைச்சுவை வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். சமூக வலைதளங்களில் புதுப்படங்கள் வெளியாகும்போது அதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது.நல்ல படங்களை ரூ.பல கோடி செலவு செய்து எடுக்கும் இயக்குநர், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் படம் எப்படி வரும், மக்கள் வரவேற்பு கொடுப்பார்களா என கடவுளை வேண்டிக் கொண்டு இருக்கும்போது, தவறான முறையில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மக்கள் இதை வரவேற்க கூடாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 21, 2025 04:21

சினிமாவா? நடுத்தெருவா? என்று முதலில் கோபாலபுரம் குடும்பம் முடிவு செய்யட்டும். பிறகு பார்க்கலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை