உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிரமத்தை போக்கலாமே: போக்குவரத்து நெருக்கடி பகுதியில் அரசியல் கட்சி கூட்டங்கள்

சிரமத்தை போக்கலாமே: போக்குவரத்து நெருக்கடி பகுதியில் அரசியல் கட்சி கூட்டங்கள்

மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் சார்பில் நடக்கும் பொதுக்கூட்டங்கள் பொதுமக்கள் அதிகம் செல்லும் ரோடுகளில் நடத்தப்படுகின்றன. கூட்டம் நடக்கும் நாள் காலையிலே ரோட்டை மறித்து மேடைகள் அமைத்து விடுகின்றனர். அன்று முழுவதும் அருகில் உள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவிக்கப்படாத விடுமுறையாக உள்ளது. காதை செவிடாக்கும் வகையில் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கிகளில் கட்சிப் பாட்டுகள் ஒலிபரப்பப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கூட்டங்கள் நடத்தி முடிக்கும் வரை போக்குவரத்துக்கும் தடை செய்வதால் பெண்கள் குறிப்பாக பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு செல்வதற்கு மிகுந்த இடையூறாக உள்ளது. பொதுமக்களை பாதிக்காத வகையில் ஒதுக்குப்புறமான இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சியினரும் இதற்கு ஒத்ததுழைக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை