முதியவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்
பழநி: ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தியம் அருகே கஞ்சிகாளி வலசு பகுதியை சேர்ந்தவர் திருமலை சாமி 70. இவரது மகன் தமிழன்பன் 42 .இவருக்கும் வடபருத்தியூரை சேர்ந்த தங்கவேல் இடையே பணம் கொடுப்பது வாங்குவது தொடர்பாக பிரச்னை இருந்தது. இது தொடர்பாக 2018 ஆக.,3 ல் ஏற்பட்ட தகராறில் தமிழன்பன் தந்தை திருமலை சாமியை தங்கவேல் அரிவாளால் வெட்டி கொலை செய்தார் .இதன் வழக்கு பழநி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி மலர் விழி , குற்றவாளி தங்கவேலுக்கு ஆயுள் தண்டனை, ரூ.பத்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.