உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை

போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் சுரைக்காய்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமர் 60. இவர் 2022ல், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசாரால் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்புநீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார். ராமருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.11ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சத்தியதாரா தீர்ப்பளித்தார். இங்கு இதுவரை 44 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ