உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்

சுமை துாக்குவோர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக சுமை துாக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் திண்டுக்கல் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க அங்கீகார தேர்தலை நடத்த வேண்டும், வருகை பதிவேட்டில் பெயர் சேர்க்க வேண்டும், நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். நிர்வாகி சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை