உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சண்முக நதி, இடும்பன் குளத்தில் கழிவுகள் முகம் சுளிக்கும் ஐயப்ப பக்தர்கள்

சண்முக நதி, இடும்பன் குளத்தில் கழிவுகள் முகம் சுளிக்கும் ஐயப்ப பக்தர்கள்

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி புனித நீர்நிலைகளான சண்முக நதி, இடும்பன் குளம் கழிவுகளுடன் மாசடைந்து உள்ளதால் ஐயப்ப பக்தர்கள் முகம் சுளிக்கும் அவலம் தொடர்கிறது.பழநியில் கார்த்திகை முதல் தேதியிலிருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ஐயப்ப பக்தர்கள் இங்குள்ள இடும்பன் குளம், சண்முக நதியில் நீராடிய பின் பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்வர். தற்போது இடும்பன் குளத்தில் துணிகள் அதிகம் மிதப்பதாலும், மாசடைந்து உள்ளதாலும் பக்தர்கள் குளத்தில் குளிக்க சிரமம் அடைகின்றனர்.சண்முக நதியில் சாக்கடை கழிவுநீர் கலந்து அமலை செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. நீராடும் இடம் சகதிமயமாக உள்ளது. இதனால் முகம் சுளிக்கும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதையே தவிர்த்து விடுகின்றனர்.பா.ஜ., இளைஞரணி மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது: பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வருகின்றனர். சண்முக நதி, இடும்பன் குளம் மாசடைந்துள்ளதால் வெளியூர் பக்தர்கள் குளிப்பதை தவிர்த்து வருகின்றனர். சண்முக நதியிலுள்ள அமலை செடிகளை அப்புறப்படுத்தி துாய்மைப்படுத்த பொதுப்பணி மற்றும் ஹிந்து அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை