நவராத்திரி உற்ஸவம் அம்பு வீசிய பெருமாள்
வடமதுரை : வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி உற்ஸவ விழா செப்.22ல் துவங்கியது. நாள்தோறும் வெவ்வேறு மண்டகபடிதாரர்களால் நவராத்திரி கொலு உற்ஸவ வழிபாடு நடந்தது. 10 நாளான நேற்று மாலை பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தேர் வீதிகள் வழியே நகர் வலம் வந்தார். திருச்சி ரோடு மங்கம்மாள் கேணி சென்று பாரிவேட்டை, அம்பு வீசும் நிகழ்ச்சி நடந்தது. வடமதுரை மீனாட்சி அம்மன், காளியம்மன், மாரியம்மன், அய்யலுார் மண்டபத்தோட்டம் சக்திமுத்து மாரியம்மன் கோயில்களிலும் 10 நாட்கள் நவராத்திரி உற்ஸவ விழா நடந்தது.