உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முறிந்து விழுந்த ரயில்வே கே;ட் வழியில் நின்ற மதுரை ரயில்

முறிந்து விழுந்த ரயில்வே கே;ட் வழியில் நின்ற மதுரை ரயில்

சின்னாளபட்டி : திண்டுக்கல் மாவட்டம் செட்டியபட்டி அருகே பராமரிப்பின்றி ரயில்வே கேட் முறிந்து விழுந்ததால் சிக்னல் கிடைக்காமல் மதுரை சென்ற கோவை-நாகர்கோவில் ரயில் நடுவழியில் நின்றது.ரயில்வே தடத்தில் உள்ள கிராசிங்குகளில் அவ்வப்போது பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி ரயில்வே கேட்களை மூடுவது வழக்கம்.இருப்பினும் அதிகாரிகளின் அலட்சியத்தால் சில இடங்களில் சேதப்பகுதிகளை பராமரிப்பதில் தொய்வு நிலவுகிறது. இவை பிரச்னைகளை ஏற்படுத்திய போதும் கண்காணிப்பில் பின்னடைவு நீடிக்கிறது.கோவையிலிருந்து நாகர்கோவில் செல்ல நேற்று மதியம் 1:20 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல் ஸ்டேஷனுக்கு வந்தது. அங்கிருந்து மதியம் 1:36 மணிக்கு மதுரை புறப்பட்டது. ரயில் செட்டியபட்டி கேட் அருகே வந்த போது கீப்பர் ரயில்வே கேட்களை மூட முயன்றார். ஒரு கேட் மேல் நோக்கி நின்ற நிலையில் மற்றொரு கேட் கம்பத்தின் ஒரு பகுதி முறிந்து ரோட்டை மறித்து விழுந்தது.இதனால் சிக்னல் கிடைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ரயில்வே கேட்டிற்கு 200 மீட்டர் முன்னதாகவே அந்த எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அம்பாத்துறை ரயில்வே ஸ்டேஷனுக்கு கேட் கீப்பர் இதுகுறித்து தெரிவித்தார். பிறகு சிக்னல் பிரச்னை குறித்து ரயில் பைலட்டிற்கும் தெரிவிக்கப்பட்டது. பின் அங்கிருந்து மிக குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு செட்டியபட்டி ரயில்வேகேட்டை கடந்து 11 கி.மீ., துாரத்திலுள்ள அம்பாத்துறை ஸ்டேஷனுக்கு மதியம் 1:52 மணிக்கு வந்தது. ரயில்வே ஊழியர்கள் சேதமடைந்த கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை