சிறுமியை பலாத்காரம் செய்தவர் கைது
சாணார்பட்டி; -திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்தவர் சந்தியாகு 50. இவர் அதே பகுதி தனியார் தோட்டத்தில் வேலை செய்தபோது அவ்வழியாக வந்த 8 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் சுமதி, எஸ்.ஐ., சாரதாமணி சந்தியாகுவை கைது செய்தனர்.