உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண்ணிடம் கம்மல் பறித்தவர் கைது

பெண்ணிடம் கம்மல் பறித்தவர் கைது

திண்டுக்கல்:திண்டுக்கல் அடுத்த மாலப்பட்டியை சேர்ந்தவர் கருப்பாயி 45. கட்டட தொழிலாளி. நேற்று இவர் நாகல்நகர் பகுதியில் நின்றுகொண்டிருந்தார். அங்கு காரில் வந்தவர் 'திண்டுக்கல் அருகே கட்டட வேலை நடப்பதாகவும், தன்னுடன் வந்தால் அங்கு வேலை வாங்கி தருவதாகவும்' கூறியுள்ளார். இதை நம்பிய கருப்பாயி, அவருடன் காரில் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திடீரென காரை நிறுத்திய அந்த நபர், கருப்பாயி அணிந்திருந்த முக்கால் பவுன் கம்மலை பறித்துக்கொண்டு அவரை இறக்கிவிட்டு காரில் தப்பிச்சென்றார். விசாரணை நடத்திய போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். கருப்பாயியிடம் கம்மலை பறித்துச்சென்றவர் கேரளா, இடுக்கி மாவட்டம் பட்டுமேளா பகுதியை சேர்ந்த சஜூ 23, என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் கம்மலையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ