உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கம்பிளியம்பட்டியில் மண்டல பூஜை

கம்பிளியம்பட்டியில் மண்டல பூஜை

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வராகி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 16 வது நாள் மண்டல பூஜை விழா நடந்தது. இக்கோயிலில் ஜூலை 7 ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ,அலங்கார பூஜைகள் ,அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டல பூஜை முன்னிட்டு அம்மனுக்கு பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை , யாக பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை