உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஜூன் 9ல் மா விவசாயிகள் போராட்டம்

ஜூன் 9ல் மா விவசாயிகள் போராட்டம்

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் பகுதி மாங்காய் விவசாயிகள் சங்க கூட்டம் தலைவர் ரத்தினகுமார் தலைமையில் நடந்தது. செயலாளர் பாண்டி, பொருளாளர் கார்த்தி முன்னிலை வகித்தனர். டன்னிற்கு ரூ.18 ஆயிரம் விலை போன மாங்காய் இந்தாண்டு டன் ரூ.4 முதல் ரூ.5 ஆயிரம் என கட்டுபடியாகாத விலைக்கு கேட்கின்றனர். இதனால் மாம்பழங்களை வெளி மாநிலங்கள் ,வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனத்தை உடனடியாக தொடங்க வேண்டும். மாங்காய்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையினை நிர்ணயம் செய்ய வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வரும் மா சார்ந்த உணவு வகைகளை தடை செய்யவும் இதனை நிறைவேற்றாவிட்டால் ஜூன் 9ம் தேதி மாங்காய் விவசாயிகள் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பாக மாம்பழங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி