உள்ளூர் செய்திகள்

மாரத்தான் ஓட்டம்

வடமதுரை:வடமதுரையில் மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை, எஸ். கே. அகாடமி இணைந்து ரோடு பாதுகாப்பு, ரத்த தான விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டம் நடத்தினர். டாக்டர் சேகர் தலைமை வகித்தார். 14 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்களாக 100க்கு மேற்பட்டவர்கள் 8 கி.மீ., துாரம் ஓடினர். பள்ளியில் நடந்த பரிசளிப்பு விழாவில் ஓட்டத்தில் சிறப்பிடம், பங்கேற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளை நிறுவனர் தேவரா, எஸ். கே.அகாடமி நிறுவனர் லோகநாதன், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயநாதன், முத்துக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை