மேலும் செய்திகள்
கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
04-Nov-2026
வடமதுரை: காணப்பாடியில் மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துச்சாமி, ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, நிர்வாகிகள் சங்கர், சம்சுதீன் பங்கேற்றனர். இப்பகுதியில் மனு தந்து காத்திருக்கும் 60 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கே.ராமநாதபுரத்தில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதேபோல் வேடசந்துார் ஆத்துமேடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக சென்ற தனியார் பஸ்சை மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் சிறைபிடித்தனர். வேடசந்தூர் எஸ்.ஐ., சிராஜூதீன் சமரசம் செய்தார்.
04-Nov-2026