மேலும் செய்திகள்
8 மணி நேர சோதனையில் 3 ஆம்னி பஸ் பறிமுதல்
15-Sep-2024
திண்டுக்கல்: தேனி மாவட்டம், போடி நாயக்கனுாரை சேர்ந்தவர் ஆம்னி பஸ் டிரைவர் பரணிக்குமார், 54. இவர், நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து தேனி செல்லும் ஆம்னி பஸ்சை ஓட்டி வந்தார். நேற்று காலை திண்டுக்கல் வந்த அந்த பஸ், 40 பயணியருடன் தேனி நோக்கி சென்று கொண்டிருந்தது. வத்தலக்குண்டு மெயின்ரோடு வக்கம்பட்டி அருகே ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆத்துாரை சேர்ந்த பக்ருதீன், 49, என்பவர் ஓட்டி வந்த கொடைக்கானல், பண்ணைக்காட்டிலிருந்து மர லோடுகளை ஏற்றி வந்த லாரி, திடீரென ஆம்னி பஸ் மீது மோதியது. இதில், ஆம்னி பஸ்சின் முன்பகுதி நொறுங்கி அதிலிருந்த, 11 பயணியர் காயமடைந்தனர்; இருவர் பஸ்சின் உள்பகுதியில் சிக்கினர்.தாலுகா போலீசார், தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, பஸ்சில் சிக்கியவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில், லாரியில் வந்த நத்தத்தை சேர்ந்த லாரி மெக்கானிக் கணபதி, 48, இறந்தார்.
15-Sep-2024