மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
20-Nov-2024
வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் பேசினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரமணி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வராணி பங்கேற்றனர்.
20-Nov-2024