உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயில்களில் உணவு தரம் மருத்துவத்துறை சோதனை

ரயில்களில் உணவு தரம் மருத்துவத்துறை சோதனை

திண்டுக்கல்: தீபாவளி சிறப்பு ரயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை ரயில்வே மருத்துவத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வழியாக தினமும் 70க்கு மேலான ரயில்கள் செல்கின்றன. இங்கிருந்து வெளி மாவட்ட,மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கில் பயணிகள் செல்கின்றனர். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் வந்தே பாரத் ரயிலில் உணவுப்பொருட்கள் தரமில்லாமல் இருந்தது என புகார் செய்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் பணியாற்றும் ரயில்வே மருத்துவத்துறை அதிகாரிகள் தினமும் காலை,மாலை நேரங்களில் திண்டுக்கல் வழியாக செல்லும் வைகை எக்ஸ்பிரஸ்,தீபாவளி சிறப்பு ரயில்களில் ஏறி கேண்டீன்களில் வாங்கிய உணவுகளை சோதனை செய்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்கின்றனர். தரம் குறைவாக இருந்தால் உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்புகின்றனர். அதன் முடிவுகள் வந்ததும் சம்பந்தபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பபடுவதாக ரயில்வே மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ