மினி பஸ் சேவை
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தும்மிச்சம்பட்டி, சத்தியா நகர், பழநிகவுண்டன் புதுார், காவேரி அம்மாபட்டி, குரும்பபட்டி, ராயக்கவுண்டன் புதுார், குள்ளவீரன்பட்டி வழித்தடத்தில் மினி பஸ் இயக்கப்படுகிறது. இதை காப்பிலியப்பட்டியில் அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.நகராட்சி தலைவர் திருமலைசாமி, ஒன்றிய செயலாளர் பாலு, துணைச் செயலாளர்கள் சிவபாக்கியம் ராமசாமி, முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அசோக் வேலுச்சாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கவுரி சரவணன், பஸ் உரிமையாளர்கள் திருமலைசாமி, சுப்பிரமணி கலந்து கொண்டனர்.