மேலும் செய்திகள்
விரைவில் 20 லட்சம்‛ லேப் டாப் அமைச்சர் சக்கரபாணி
03-Sep-2025
வடமதுரை : கரூர் த.வெ.க., பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த இருவரது குடும்பத்தினரிடம் அரசு அறிவித்த ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். வடமதுரை பாகாநத்தம் ஒத்தப்பட்டி தாமரைக்கண்ணன் 26, எரியோடு வடக்கு தளிப்பட்டி சங்கர்கணேஷ் 45 கரூர் பகுதியில் பணிபுரிந்தனர். நேற்றுமுன்தினம் நடந்த த.வெ.க., பிரசாரத்தில் நடிகர் விஜயை பார்க்க சென்று இருவரும் நெரிசலில் சிக்கி இறந்தனர். அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இத்தொகையை நேற்று மாலை அமைச்சர் சக்கரபாணி காசோலையாக இருவரது குடும்பத்தினரிடமும் வழங்கினார். இத்துடன் மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் ரூ.ஒரு லட்சமும் தனியே வழங்கப்பட்டது. கலெக்டர் சரவணன், எம்.பி., சச்சிதானந்தம், எம்.எல்.ஏ., காந்திராஜன் உடனிருந்தனர்.
03-Sep-2025