மேலும் செய்திகள்
தி.மு.க.,ஆலோசனை கூட்டம்
12-Jun-2025
வடமதுரை: ''மகளிர் உதவித்தொகை திட்டத்தில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளனர். அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்''என அமைச்சர் சக்கரபாணி பேசினார். வடமதுரையில் நடந்த தி.மு.க., ஓட்டுச்சாவடி டிஜிட்டல் முகவர் கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஒட்டன்சத்திரம், வேடசந்துார், குஜிலியம்பாறை, வடமதுரை, சாணார்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு அமராவதி, காவரி ஆற்று உபரி நீரை கொண்டு வரும் திட்டப் பணி ஆய்விற்காக அரசு ரூ.ஒரு கோடி ஒதுக்கியுள்ளது. காலத்திற்கேற்ப தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை பணியும் டிஜிட்டல் முறைக்கு மாறுகிறது. இதற்காக பூத் வாரியாக டிஜிட்டல் முகவர்கள் நியமிக்கப்படுகின்றனர். மகளிர் உதவித்தொகை திட்டத்தில் சேர்வதற்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து இன்றைய (நேற்று) தினமலர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளனர்.அதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். அரசின் திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன் முன்னிலை வகித்தனர். தொகுதி தேர்தல் பொறுப்பாளர் வீரமணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி பங்கேற்றனர்.
12-Jun-2025