| ADDED : ஜன 15, 2024 04:42 AM
ஒட்டன்சத்திரம், : ''பரப்பலாறு அணையை தூர்வார வரும் ஜன.24 ல் டெண்டர் விடப்பட உள்ளது''என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசினார்.ஒட்டன்சத்திரம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி திருவாட்டுக்காடு, மாட்டுப்பட்டி காடு ,புலிகுத்தி காடு ஆகிய கிராமங்களுக்கு ரூ. 3.29 கோடி மதிப்பீட்டில் புதிய தார் ரோடு அமைக்கும் பணிகள்,ரூ.1.17 கோடி மதிப்பில் சிறுவாட்டுக்காடு பழங்குடியின மக்களுக்கு அடிப்படை உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:பரப்பலாறு அணை 1974ல் தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்டது. அதேபோல் ஒட்டன்சத்திரத்திலிருந்து பாச்சலுாருக்கு தி.மு.க., ஆட்சியில் தான் ரோடு போடப்பட்டது. ஜன. 24 ல் பரப்பலாறு அணையை துார் வாருவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது. அமைச்சர் கயல்விழி பேசியதாவது: பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தில் ரூ 5.07 லட்சம், மலைப்பகுதி கிராமங்கள் எனில் ரூ. 5.37 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளில் 3500 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ரூ.5 லட்சம் வரை மானியம், குறைந்தவட்டியில் கடன் உதவி, 35 சதவீதம் மானியத்தில் தொழில் கடன் உதவி வழங்கப்படுகிறது என்றார்.கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, வனத்துறை உதவி பொறியாளர் கணேசன், ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, ஊராட்சி தலைவர் தனலட்சுமி, தி.மு.க, மாவட்ட துணை பொதுச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர் தர்மராஜ், துணைச் செயலாளர் சிவக்குமார் முருகானந்தம் பங்கேற்றனர்.