உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க திட்டம்: அமைச்சர் பெரியசாமி குற்றச்சாட்டு

சித்தையன்கோட்டை: ''வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க மத்தியரசு திட்டமிட்டு உள்ளதாக,'' அமைச்சர் பெரியசாமி பேசினார். சித்தையன்கோட்டையில் ரேஷன் கடை கட்டடங்களை திறந்து வைத்த அவர் பேசியதாவது: பகுதிநேர ரேஷன் கடைகள் முன்பு வாரத்தில் 2 , 3 நாட்கள் மட்டுமே திறந்திருக்கும். தற்போது 30 நாட்களும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வடமாநிலத்தவர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க மத்தியரசு திட்டமிட்டு உள்ளது. அது ஒருபோதும் நடக்காது ''என்றார். துணைப்பதிவாளர் உஷா நந்தினி தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலு, தலைவர் போதும் பொண்ணு முரளி, துணைத்தலைவர் ஜாகிர்உசேன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை