உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குக்கிராமங்களில் கூட தடையின்றி ரேஷன் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்

குக்கிராமங்களில் கூட தடையின்றி ரேஷன் அமைச்சர் பெரியசாமி பெருமிதம்

சின்னாளபட்டி: ''தி.மு.க., ஆட்சியில் குக்கிராமங்களில் கூட பொதுமக்கள் தடையின்றி ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளதாக'' அமைச்சர் பெரியசாமி பேசினார். ஆத்துார் ஒன்றியம் கல்லுப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்த கூடுதல் கட்டட திறப்பு விழாவில் அவர் பேசியதாவது: கருணாநிதி தலைமையிலான ஆட்சியின்போது செட்டியபட்டி சுற்று கிராம மாணவர்கள் நலன் கருதி ஒரே நாளில் மேல்நிலைப்பள்ளி அமைக்க உத்தரவிட்டார். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்றி வருகிறோம். மாணவர்களுக்கு சிரமமின்றி போக்குவரத்து வசதி ஏற்படுத்த பள்ளிக்கு வரும் ரோடு, விரைவில் புதுப்பிக்கப்படும் என்றார்.வலையபட்டியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பேசுகையில், குக்கிராமங்களில் கூட பொதுமக்கள் தடையின்றி ரேஷன் பொருட்களை வாங்கும் நிலை உருவாக்கப்பட்டு உள்ளது, என்றார். பி.டி.ஓ.,க்கள் பத்மாவதி, முருகன், பொது வினியோக திட்ட துணை பதிவாளர் உஷா நந்தினி, பேரூராட்சி தலைவர் பிரதீபா, தலைமை ஆசிரியர் நாகேந்திரன் பங்கேற்றனர்.-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை