உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் அமைச்சர் பெரியசாமி பேச்சு

மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும் அமைச்சர் பெரியசாமி பேச்சு

நத்தம், : 'திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நூற்றுக்கு நூறு வெற்றி கனி பிரதிபலிக்க வேண்டும்' என அமைச்சர் பெரியசாமி பேசினார். -நத்தத்தில் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா முன்பாக மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பாக ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் தலைமை வகித்தனர். எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப் பட்டது. அமைச்சர் பெரியசாமி பேசியதாவது : லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எல்லோருக்கும் எல்லாம் சமம் இது தான் திராவிட மாடல் ஆட்சி. ஏற்றத்தாழ்வு கிடையாது. விடுபட்ட மகளிருக்கு விரைவில் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர். ஆனால் ரத்து செய்யவில்லை. தன்னை காப்பாற்றி கொள்ள பா.ஜ., வுடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது. தமிழக மக்களை தலை குனிய விட மாட்டோம். மண், மொழி, மானத்தை விட்டு கொடுக்க மாட்டோம். கடந்த ஜூலை 1-ம்தேதி தொடங்கபட்ட ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை 3 கோடி பேர் சேர்ந்துள்ளனர். 2026 சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் நூற்றுக்கு நூறு வெற்றி கனி பிரதிபலிக்க வேண்டும். மீண்டும் தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும். ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வர் ஆவார். இதை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் அறிவுறித்தலின் படி தமிழகம் முழுவதும் ஒரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டமானது ஒன்றிய பா.ஜ., அரசின் விரோத போக்கை கண்டித்து நடைபெறும் கூட்டம். டெல்லியில் இருந்து மிரட்டும் பா.ஜ., அரசிற்கு எப்போதும் தி.மு.க., அடிபணியாது. தமிழகத்திற்கு கல்வி நிதி தர மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆளாத மாநிலங்களை வஞ்சித்து வருகிறது. தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மேலும் நத்தம் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான அரசு கலைக்கல்லூரி கொண்டு வந்துள்ளோம். புதிதாக 21 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கனவு இல்லம் திட்டத்தில் 21 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டு 8 லட்சம் பேருக்கு வீடுகட்டும் பணிகள் நடந்து வருகிறது. மக்கள் அதிகாரிகளை தேடி போன காலம் போய் மக்களை தேடி அதிகாரிகள் வரும் திட்டம் தான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம். கூட்டத்தில் தலைமை பேச்சாளர் கவிதைப்பித்தன், சாணார்பட்டி ஒன்றிய செயலாளர்கள் தர்மராஜன், மோகன், ஜான்பீட்டர், ஜெயராமன், மாவட்ட துணை செயலாளர் சுந்தரராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்து குமார்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ