உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு

பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு நடமாடும் மருத்துவக்குழு

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக 20 இடங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்கள்,3 இடங்களில் ஆம்புலன்ஸ் வசதிகள்,கோயில் முதலுதவி சிகிச்சை மையத்தில் கூடுதலாக 5 டாக்டர்கள் என சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூசத்தையொட்டி வெளி மாவட்டங்களிலிருந்த லட்சக்கணக்கில் பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். இந்தாண்டு ஜன.25ல் தைப்பூசத்திருவிழா நடக்க இருப்பதையொட்டி ஒரு மாதகாலமாக பழநி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதாயாத்திரையாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து கொண்டிருக்கின்றனர்.அதிக பயணிகள் திண்டுக்கல் மாவட்டமான கன்னிவாடி,ரெட்டியார் சத்திரம்,ஒட்டன்சத்திரம்,விருப்பாச்சி வழித்தடத்தில் வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் கோயில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து தற்காலிக தங்குமிடம்,குடிதண்ணீர் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதுமட்டுமின்றி பல கிலோ மீட்டர் துாரத்திலிருந்து நடந்து வரும் பயணிகளுக்கு உதவும் வகையில் பொது சுகாதாரத்துறை சார்பில் ஜன.23 முதல் 26 வரை ஒட்டன்சத்திரம், பழநி வழித்தடத்தில் 20 இடங்களில் நடமாடும் மருத்துவக்குழுக்கள், மருத்துவ ஊரக நலப்பணிகள் சார்பில் நத்தம், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், வேடசந்துார், அரசு மருத்துவமனைகளில் கூடுதல் சிகிச்சைகள், பழநி முருகன் கோயில் வின்ச், ரோப்கார், பழநி அரசு மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களில் 3 ஆம்புலன்சுகள்,கோயிலில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சுழற்சி முறையில் கூடுதலாக 5 டாக்டர்களை பணியாற்றவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை