மிதமான மழை குறைந்த உற்சாகம்
திண்டுக்கல்: நேற்று மிதமான மழை பெய்ததால் தீபாவளி பண்டிகை உற்சாகம் குறைந்து காணப்பட்டது. வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியதையொட்டி, திண்டுக்கல் உள்பட மேலும் சில மாவட்டங்களில் பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதலே திண்டுக்கல்லில் வானம் மேகமூட்டத்துடன் கனமழைக்கு அச்சாரமிட்டது. இந்நிலையில், திடீரென வெயில் அடித்ததால் மழைக்கு இருண்ட மேகங்கள் கலைந்தன. மாநகர் பகுதி முழுவதும் மிதமான மழை பெய்தது. வழக்கமாக பண்டிகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். ஆனால், தீபாவளி பண்டிகையொட்டி அடிக்கடி நேற்று விட்டு, விட்டு, பெய்த மழையால் வழக்கமான பண்டிகை உற்சாகம் குறைந்தது.