மேலும் செய்திகள்
இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த கனமழை
14-Sep-2026
கரூர் சுற்று வட்டார பகுதியில் காற்றுடன் மழை
16-Sep-2026
திண்டுக்கல்:காலநிலை மாற்றத்தின் காரணமாக பருவம் தவறி மழை, வெயில் நீடிக்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழைக்காலம் துவங்கியும் சுற்றுச்சுழல் மாறுபாடு காரணமாக வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, மேற்கு திசைக் காற்று மாறுபாடு காரணமாக திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திண்டுக்கல்லில் நேற்று மிதமான மழை பெய்தது. சில நாட்களாக கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில் 15 நிமிடங்கள் பெய்ததால் பகல் வெப்பம் தணிந்து பூமி குளிர்ந்தது. மாவட்டத்தில் கொடைக்கானல், வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, நத்தம் என பிற பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
14-Sep-2026
16-Sep-2026