உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாத வாடகையாக ரூ. 6.45 லட்சத்துக்கு ஏலம் போன கடைகள்

மாத வாடகையாக ரூ. 6.45 லட்சத்துக்கு ஏலம் போன கடைகள்

குஜிலியம்பாறை: பாளையத்தில் உள்ள 28 வணிக வளாக கடைகள் இதுவரை இல்லாத வகையில் மாத வாடகைக்கு ரூ.6.45 லட்சம் ஏலம் போனது.1996 - --2001 ல் வேடசந்துார் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., வாக இருந்த கிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பாளையம் பேரூராட்சி பாளையம் வார சந்தையின் இரு புறங்களில் 20 கடைகள் கட்டப்பட்டன. இதற்கடுத்து 2007 ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 8 கடைகள் என தற்போது 28 கடைகள் உள்ளன. இதற்காக 2023 - -24 ல் நடந்த ஏலத்தில் 28 கடைகளும் சேர்ந்து ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்திற்கு எலம் போனது . இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த ஏலம் செயல் அலுவலர் பாண்டீஸ்வரி தலைமையில் நடந்தது. பேரூராட்சித் தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார்.இதுவரை குறைந்த வாடகைக்கு சென்ற இந்த கடைகள் தற்போது நடந்த ஏலத்தில் பொதுமக்கள் ஆர்வம் காட்டியதால் 28 கடைகளும் சேர்ந்து மாத வாடகையாக ரூ. 6 லட்சத்து 45 ஆயிரத்து 800 க்கு ஏலம் போனது. இதன் மொத்த வருவாய் ஆண்டுக்கு ரூ.77 லட்சத்து 49 ஆயிரத்து 600 ஆகும். இந்த ஏலம் 3 ஆண்டுகளுக்கு பொருந்தும். இதோடு 2 ,3 வது ஆண்டுகளில் தலா 5 சதவீதம் கூடுதல் கட்டணம் சேர்த்துக் கொள்ளப்படும். பாளையம் பேரூராட்சி பகுதியில் இதுவரை இல்லாத வகையில் முறையான, நியாயமான ஓபன் டெண்டர் நடைபெற்றதால் கடைகள் கூடுதல் வாடகைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்