உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / துாய்மை பணியில் எம்.பி.,

துாய்மை பணியில் எம்.பி.,

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே 3 நாட்களாக தற்காலிக ரோட்டோர கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதிகளில் அதிகளவில் குப்பை தேங்கியது. மணிக்கூண்டு, பெரியகடைவீதி பகுதி உள்ளிட்ட பல பகுதியில் தேங்கிய குப்பையை அகற்றும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் அவர்களோடு சேர்ந்து குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டார். மாவட்ட தலைவர் பாலாஜி, மாவட்ட செயலாளர் முகேஷ், பொருளாளர் பிரேம்குமார், கவுன்சிலர் ஜோதிபாசு பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ