நகராட்சி பள்ளி நுாற்றாண்டு விழா
பழநி: பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலை, நுாற்றாண்டு விழா நினைவு நுழைவுவாயிலை அமைச்சர்கள் சக்கரபாணி ,மகேஷ் திறந்து வைத்தனர். ஒலிம்பிக் சுடரை அமைச்சர் மகேஷ் பெற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். கலெக்டர் சரவணன், முதன்மை கல்வி அலுவலர் உஷா, பழநி மாவட்ட கல்வி அலுவலர் பரிமளா, நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, கமிஷனர் டிட்டோ, லோக்ஆயுத்தா உறுப்பினர் ராமராஜ், முன்னாள் தலைமை ஆசிரியர் மனோகரன், தலைமை ஆசிரியர் சுதா பங்கேற்றனர்.