உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேசிய நுாலக வார விழா

தேசிய நுாலக வார விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மைய நுாலகத்தில் 59வது தேசிய நுாலக வார விழா நடந்தது. மாவட்ட நுாலக அலுவலர் சரவணக்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காந்தி மன்றத்தின் மாநிலச் செயலாளர் ஜெயசீலன் பேசினார். வாசகர் வட்ட நிர்வாகிகள் முருகன், அனந்தராமன், மீராபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு தலைப்புகளில் நிர்வாகிகள் பேசினர். மாவட்ட நுாலக அலுவலர் கூறுகையில், ‘தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு புத்தக வாசிப்பு, நுாலகம் குறித்த தலைப்புகள் வழங்கப்பட்டு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நவ.,14ல் துவங்கி நடந்து வருகிறது. நவ.,22ல் இறுதிப்போட்டி நடக்க உள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்’ என்றார். மைய முதல்நிலை நுாலக அலுவலர் சுகுமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !