உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

தனுஷ் - நயன்தாரா மோதல் முற்றுகிறது; ஆவணப்படத்தில் இடம் பெற்றது 3 வினாடி வீடியோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: நடிகர் தனுஷின் எதிர்ப்பையும் மீறி, சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சியை, நயன்தாரா தனது ஆவணப்படத்தில் சேர்த்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த 2022ம் ஆண்டு இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நாளை (நவ., 18) வெளியாக இருக்கிறது.இந்த ஆவணப்படத்தின் டிரெய்லரில், 'நானும் ரவுடி தான்' படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட 3 வினாடி காட்சி தான் தற்போது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. ''நானும் ரவுடி தான்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி, நயன்தாரா நடித்த போது, இருவருக்கும் இடையிலான காதல் உருவானதாக சொல்லப்படுகிறது. எனவே, சென்டிமென்டிற்காக, அந்தப் படத்தின் காட்சிகளையும், பாடல்களையும் இந்த ஆவணப்படத்தில் பயன்படுத்த இருவரும் முடிவு செய்துள்ளனர். ஆனால், அதற்கான அனுமதியை அந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் வழங்காததால், இந்த ஆவணப்படம் 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை என்று நயன்தாரா கூறியிருந்தார். மேலும், படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய கேமிராவில் எடுத்த காட்சிகளை பயன்படுத்தினாலும், ரூ.10 கோடி கேட்பதா? என்று தனுஷ் நோட்டீஸ் அனுப்பியதையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷ் இதுவரையில் வாய் திறக்காத நிலையில், முறையாக வந்து கேட்காததால் தான் தனுஷ் அனுமதி வழங்கவில்லை என்று சினிமா விமர்சகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். இதனால், சர்ச்சைக்குள்ளான 3 வினாடி காட்சிகளை நயன்தாரா நீக்குவாரா? இல்லையா? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்து வந்தது. இந்த நிலையில், ஆவணப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சி இன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகர் தனுஷின் எதிர்ப்பை மீறி, பட ஷூட்டிங்கின் போது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஒன்றாக இருக்கும் 3 வினாடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், இரு தரப்பினரிடையேயான மோதல் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் குறித்து தனுஷ் தன்னிடம் விமர்சித்துப் பேசியதாக, நடிகை ஒருவர் பேசும் காட்சிகள் நயன்தாராவின் ஆவணப்படத்தில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Kayal Karpagavalli
நவ 19, 2024 13:03

சட்டியில் இருந்தால் மட்டும் தான் அகப்பையில் வரும்........


ஆரூர் ரங்
நவ 18, 2024 10:54

ஒண்ணும் பண்ண வேண்டாம். மிஸ்டர் பாலிடாயலிடம் கூறினால் போதும். அத்துடன் ஓரத்தில் குந்தி விடுவார்.


Mr Krish Tamilnadu
நவ 17, 2024 23:33

மாமனார் தான் மேடத்தோட வெல் விஷ்சர். அவர் பேச்ச கேட்டு தான் அம்பு? வேண்டாம்னு முடிவு பண்ணுணாங்க. சந்திரமுகி, குசலேன், சிவாஜி னு மரியாதையான நட்பு என்றும் தொடருது. தனுஷ் சுக்கு தெரியாததா என்ன? கலை எப்ப வேணாலும் சம்பந்தப்பட்டவங்க ப்ரியா பயன்படுத்தி கொள்ளலாம். பணத்தை விட உணர்வு பெரியது. உணர்வுக்கான அர்ப்பணிப்புக்காக சம்பளத்துடன் கொடுக்கும் போனஸ், அவர்களுக்கான பயன்படுத்தும் உரிமை தான்


பச்சை தமிழன்
நவ 17, 2024 23:25

இது ஒரு திட்டமிட்ட நாடகம். யாரும் இதை நம்பாதீர்கள். கங்குவா படத்தின் விமர்சனம் படு கேவலமாக வந்து கொண்டு இருந்தது. அதை மறைத்து அந்த படத்தை பற்றிய எண்ணங்களை மாற்றி அந்த படத்தை ஓட வைக்க எடுக்கும் கேவலமான முயற்சியே இது. நடிகர்களே, நீங்கள் என்னதான் திரைக்கு வெளியில் நடித்தாலும் நாங்கள் நம்ப மாட்டோம் . எப்படி இருந்தாலும் கங்குவா படம் எல்லா மக்களையும் முட்டாளாக்கி ஏமாற்றி விட்டது. இனிமேலும் சினிமா ரசிகர்களை முட்டளாக்க வேண்டாம். முட்டாளாக நினைக்க வேண்டாம் திரு. கங்குவா சிவா அவர்களே...


Kasimani Baskaran
நவ 17, 2024 22:14

சுசித்ராவை கூப்பிட்டு பஞ்சாயத்து செய்யச்சொல்லலாம்...


சோலை பார்த்தி
நவ 17, 2024 21:44

ஆளும் கட்சியின் சூழ்ச்சி


சோலை பார்த்தி
நவ 17, 2024 21:43

இது சித்தரிக்கபட்டது. . . ஏன் னா. . .ஹை கோர்ட் சொன்னத மக்கள மறக்கடிக்க முயற்சி


sankaranarayanan
நவ 17, 2024 21:05

அமலாபாலின் வாழ்க்கை டிடியின் வாழ்க்கை த்ரிஷாவின் வாழ்க்கை இப்படி பல முன்னணி நட்சத்திறன்களின் வாழக்கைகளின் விளையாடிய நபருக்கு இன்னுமா இந்த விளையாடல்கள்


M Ramachandran
நவ 17, 2024 20:28

நயனின் வியாபாரம் படுத்து விட்டதா? வேறு வகையில் விளம்பரம். பழைய கூத்தெல்லாம் ஞாபகம் வருத்தில்ல.


Kayal Karpagavalli
நவ 17, 2024 20:25

Femi 9 is wonderful product..... Programmes for women will have positive benefit only..... Old songs and music are still used for profit..... Good justice will console everyone....


புதிய வீடியோ