தேவை வடமதுரை -சின்னாளபட்டிக்கு டவுன் பஸ்
வடமதுரை: திண்டுக்கல் வடமதுரை இடையே பல முக்கிய பஸ் ஸ்டாப்கள் உள்ளன. தாமரைப்பாடி பகுதியில் 3 கல்லுாரிகளும், வேல்வார்கோட்டை பகுதியில் பல தொழிற்சாலைகளும் உள்ளன. வடமதுரை வழியே இயக்கப்படும் டவுன் பஸ்கள் அனைத்தும் கிராமங்களிலிருந்துபுறப்பட்டு திண்டுக்கல் செல்கின்றன. இதனால் வடமதுரைக்கு வரும்போதே பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் உள்ளது. வடமதுரை அடுத்து திண்டுக்கல் வரை ஒவ்வொரு பஸ் ஸ்டாப்களிலும் பயணிகள் ஏறுவதால் தாமரைப்பாடியிலிருந்து படிக்கட்டில் ஆபத்தாக தொங்கும் நிலை உள்ளது. திண்டுக்கல் நகரை நெருங்கும்போது பயணிகள் மேலும் பஸ்சில் ஏற முடியாத நிலையில் தவிக்கின்றனர். இதனால் மக்களின் சிரமங்களை குறைக்க காலை, மாலை நேரங்களில் வடமதுரையில் திண்டுக்கல் வழியே சின்னாளபட்டி வரை சென்று திரும்பும் வகையில் டவுன் பஸ் சேவைகளை இயக்க வேண்டும்.